தமிழ் ஜோதிட களஞ்சியம்



ஜாதகம்

"ஜனனி ஜன்ம செளக்யானம், வர்த்தனி குல சம்பதம் பதவீம் பூர்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா"

ஒவ்வொரு ஜாதகத்தின் தொடக்கத்திலும் இவ்வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதன் பொருள் யாதெனில் இந்த ஜன்மத்தில் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மை, தீமைகள் அவன் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் பிரம்மாவால் கணிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது. அது ஜாதக கட்டத்தில் கிரகங்களின் அமைப்பில் சங்கேதமாக குறிக்கப்பட்டுள்ளது.

ZODIAC எனப்படும் இராசி மண்டலம் பூமியை சுற்றியுள்ள 360 பாகை சுற்றளவுள்ள கற்பனையான 18 பாகை அகலமுள்ள பகுதியாகும். இதன் மையத்தில் ecliptic எனப்படும் சூரியனின் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இராசி மண்டலம் 30 பாகை அளவுள்ள 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருசிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியனவாகும். இந்த 12 ராசிகளே ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளாகும். ஒருவர் பிறக்கும் போது உள்ள கிரக நிலைகள் ராசி கட்டத்தில் குறிக்கப்படுகிறது. உதரணத்திற்கு ஒருவர் பிறக்கும்போது சூரியன் 70 பாகையில் இருந்தால் அது மிதுன ராசியில் 10 பாகை வரை உள்ளது. (30 பாகை மேஷம் + 30 பாகை ரிஷபம் முடிந்து மிதுனத்தில் 10 பாகை). மேலும் இராசி மண்டலம் 13.3333 பாகை அளவுள்ள 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் பிறக்கும்போது கீழ்வானத்தில் (Eastern horizon) உதயமாகும் இரசியே ஜனன லக்கினமாகும். பூமி தன்னை தானே சுற்றிகொள்வதால் உதய ராசி மாறிக்கொண்டே இருக்கும். இது ஜாதகத்தில் "ல" என்று குறிக்கப்படும். லக்கினம் மிக முக்கியமாகும். லக்கினமே ஜாதகத்தில் முதல் வீடு / இலக்கின பாவமாகும். சந்திரன் இருக்கும் ராசியே ஜன்ம ராசியாகும். சந்திரன் இருக்கும் நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரமாகும்.

உங்கள் ஜாதகத்தை தமிழில் பெற www.freehoroscopesonline.in